பயர்பாக்ஸ் என்பது மோசில்லாவின் புகழ்பெற்ற இணைய உலாவி, இது திரைபலகக்கணினியில் விண்டோஸ், மேக் OS X, மற்றும் லினக்ஸ் ஆகியவற்றிக்கும் ஆண்ட்ராய்ட் திறன்பேசிகழுக்கும் என பல இயங்குதளங்கழுக்கு கிடைக்கிறது. பல வசதிகளுடன், நவீன வலை தொழில்நுட்பத்துடனும், மற்றும் சக்தி வாய்ந்த வளர்ச்சிக்கருவிகளைக்கொண்டு, பயர்பாக்ஸ் வலை வளர்சியாளர்களுக்கும்,பயனர்களுக்கும் அருமையான தேர்வாக திகழ்கிறது.
பயர்பாக்ஸ் என்பது திறமூல திட்டம்; மிகுந்த அளவிலான குறியீடுகள் எங்கள் மிகப்பெரிய சமுகத்தில் உள்ள தொண்டர்களால் அளிக்கப்பட்டது. இங்கு நீங்கள் அறிந்து கொள்ளப்போவது எவ்வாறு பயர்பாக்ஸ் திட்டத்திற்கு பங்கு அளிக்கவேண்டும் மற்றும் நீங்கள் பயர்பாக்ஸ் நீட்டிப்புகளை உருவாக்குவதை பற்றிய தகவல்களை அளிக்கும் இணைப்பு முகவரிகளையும், பயர்பாக்ஸ் வளர்ச்சி கருவிகளை உபயோக்கிக்கும் முறையையும்,மற்றவற்றை பற்றியும் அறிந்துகொள்ள இயலும்.
இங்கு பயர்பாக்ஸ் நீடிப்புகளை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் மற்றும் பயர்பாக்ஸினுள் உருவாக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- வளர்சியாளர் வெளியீடுக்குறிப்புகள்
வளர்சியாளர் வெளியீடுக்குறிப்புகள் மூலம் பயர்பாக்ஸில் வந்துள்ள வளைபக்கங்களிலும்,நீட்டிப்புகளிலும் உபயோகிக்கும் புதிய வசதிகளை அறியலாம்.
- திட்ட ஆவணமாக்கம்
பயர்பாக்ஸின் உள்ளீடுகள் பற்றி தகவல் அறியுமிடம்.
- வளர்ச்சி வழிகாட்டி
எங்கள் வளர்ச்சி வழிகாட்டி பயர்பாக்ஸ் மூல குறியீடுகளை எவ்வாறு கொண்டு தொகுக்க வேண்டும் என்பதை பற்றிக் கூறும்.
பயர்பாக்ஸ் நான்கு சேனல்களில்(பதிப்புகளாக) கிடைக்கிறது . ரிலீஸ் பதிப்பு தினசரி பயன்பாட்டிற்கானது; இதுதான் உலகமெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஏற்ற பதிப்பு. மற்ற பதிப்புகள் சோதனையாளர்களால் பயன்படுத்தபடுவது.
- Firefox Nightly
பயர்பாக்ஸ் நைட்லி பதிப்பு சோதனையாளர்கள் பயன்பாட்டிற்கு மட்டும்.
நைட்லி பதிப்பை பதிவிறக்கு - Firefox Aurora
இது சோதனையில் உள்ள பயன்பாடுகளைக் கொண்டது .
ஆரோரா பதிப்பை பதிவிறக்கு - Firefox Beta
புதிய வசதிகள் ஸ்திரமான சூழலில் கொண்டது.
பீட்டா பதிப்பை பதிவிறக்கு - Firefox
உலகில் உள்ள மில்லியன் கணக்கான பயனாளர்களால் சோதித்துப் பயன்படுத்தப்படுவது.
பயர்பாக்ஸினை பதிவிறக்கு
Join the Firefox community
- IRC: #developers (learn more)
- Calendar: Web, iCal